பி.ஹச்.டி படித்துவிட்டு தரை கூட்டும் 5000 பேர்

இந்த புள்ளி விவரங்கள் உங்களுக்கு ஆச்சிரியம் அளிக்கலாம். பி.இ. படித்தோமா கம்பூயட்டர் கம்பெனியில் வேலை வாங்கினோமா என்று வாழும் நமது இளைய சமுதாயத்திற்கு இந்த புள்ளி விவரங்கள் நிச்சியம் ஆச்சிரியமாகத்தான் இருக்கும்.கீழே கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் உள்ள அனைவரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள். பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேறு வேலை கிடைக்காததால் இந்த வேலைகளை தேர்ந்தெடுத்தவர்கள்.

உணவகங்களில் சர்வர் வேலை பார்ப்பவர்கள் - 3 லட்சம் (பி.ஹச்.டி முடித்தவர்கள் - 8000)
தரை கூட்டுபவர்கள் - 1 லட்சம் (பி.ஹச்.டி முடித்தவர்கள் - 5000)
லாரி (Truck) ஒட்டுபவர்கள் - 85 ஆயிரம்
தோட்ட  வேலை பார்ப்பவர்கள் - 62 ஆயிரம்
கட்டிட வேலை பார்ப்பவர்கள் - 60 ஆயிரம்

இது போல் மொத்தம் 1.75 கோடி மக்கள் பட்டப்படிப்பை முடத்துவிட்டு அதற்கு சம்பந்தமில்லாத, இந்த படிப்பு தேவைப்படாத வேலைகளில் உள்ளனர். அதற்காக இந்த வேலைகள் எல்லாம் தரம் குறைந்தவை என்ற நான் கூறவில்லை. ஆனால் அதே நேரத்தில் சரியான தகுதிக்கு சரியான வேலை என்பது ஒரு சமுதாயத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இது என்ன புதுசா, காலம் காலமாக இந்தியாவில் நடப்பதுதானே என்று கூறும் அல்லது எண்ணும் நண்பர்களுக்கு இந்த புள்ளி விபரம் இந்தியா சம்பந்தப்பட்டது அல்ல. இது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம். மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லவும்.


ஹும்.. கஷ்டந்தான்... இக்கரைக்கு அக்கரை பச்சை!!!

குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.


3 comments:

Ravikumar said...

உண்மைதான், இக்கரைக்கு அக்கரை பச்சை

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல வேளை நான் படிக்கலை

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.