நம்பினால் நம்புங்கள் - பிரசவ செலவை கட்டமுடியாமல் மரத்தின் உச்சியில் வாழும் இந்தியன்

ஆம் நம்பினால் நம்புங்கள்!!

மனைவியின் பிரசவ செலவான 4000 ரூபாயை கட்ட முடியாமல் மரத்தின் உச்சியிலிருந்து இறங்க மறுத்து சில நாட்களாக இருந்து வருகிறார் (இங்கே)


ஒரிசாவில் ஒகில் முண்டா என்பவர் தன் மனைவியை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கே அவரின் மனைவிக்கு சுகப்பிரசவம் இயலாமல் போகவே சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது. இது வரை எல்லாம் சுகமே. ஆனால் மருத்தவமனை பில்லை பார்த்தவுடன் ஒகில் முண்டா ஆடிப்போனார். 4000 ரூபாய் கட்ட தன்னிடம் வழியில்லாததால் அறுபதடி மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதிலிருந்து இறங்கியும் வர மறுக்கிறாராம்.


மருத்தவமனை பில்லை கட்ட வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியும் கீழே வர மறுக்கிறாராம். மருத்தவமனை அந்த பணத்தை கட்ட வேண்டாம் என்று சொல்வதை நம்ப மறுக்கிறாராம்.

அவருக்கு உணவும் தண்ணீரும் கீழிருந்து அனுப்பபடுகிறது. இன்னும் அவரை கீழே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிஸ்கி - அப்புறம் பல்லாயிரம் கோடி ஸ்பெக்டரம் ஊழல் விஷயமா நம்ப மந்திரி ராசா கிட்ட நேத்து கேட்டாங்களாம். எனக்கு உடம்பு சரியில்ல அப்புறம் பேசலாம்னு போயிட்டாராம். நாலாயிரம் ரூபாய் பிரச்சனைன்னா மரத்துல கொஞ்ச நாள் இருந்தா பணத்த தள்ளுபடி செய்யுறாங்களாம். நாப்பதாயிரம் கோடி ரூபாய் பிரச்சனைன்னா வானத்துக்கும் மேல கொஞ்ச நாள் தங்குனா விட்டுவாங்களா? உங்களுக்கு தெரிஞ்சா நம்ம மந்திருக்கு சொல்லுங்க!!

முக்கிய குறிப்பு: பிடித்திருந்தால் மறக்காமல் இன்ட்லி, தமிழ்வெளி, தமிழ்மணம் ஆகியவற்றில் ஓட்டுப்போடுங்கள்.


3 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

// மருத்தவமனை அந்த பணத்தை கட்ட வேண்டாம் என்று சொல்வதை நம்ப மறுக்கிறாராம்.//

லூஸாப்பா நீ???

Chitra said...

அவரை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே! ஹா,ஹா,ஹா,ஹா...

Anonymous said...

ஹா..ஹா..அருமை நண்பா