பிட் நோட்டீஸ் - 10/01/10

அயோத்தி தீர்ப்பு
ஊதி ஊதி பெரிசாக்கிய பலூன் நல்ல வேளை வெடிக்கவில்லை. தீர்ப்பிற்கு பின் இருக்கும் அமைதி மனதுக்கு நிம்மதி தருகிறது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஊத போகிறார்களாம். அதுவும் வெடிக்காமல் போக அல்லாவும் அரியும் உதவ வேண்டும்.



தென்கச்சி பக்கம்
தென்கச்சி சுவாமிநாதன் என்ற பெயரைச் சொன்னவுடன் 'இன்று ஒரு தகவல்'
என்ற சொல்லும் தானாக ஞாபகம் வந்துவிடும். அவர் கூறிய துணுக்குகளையும் தகவல்களையும் இந்த பகுதியில் எழுதலாம் என்று இருக்கிறேன். கீழே உள்ள செய்தி அவர் பற்றியது.

கேள்வியாளர்: 60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள் செய்தி என்ன?
தென்கச்சி: முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக இருக்கிறது. அவர் சொன்னார். "நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப் போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது."

அலமாரி அலசல்
பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த விளம்பரத்தை பார்த்தேன். இது லக்ஸ் சோப் விளம்பரம் 1949-ல் சக்தி என்ற இதழில் வந்தது



கீழே உள்ள படம் சமீபத்தில் நான் கண்டது.

அந்த பழைய விளம்பரத்தில் என்னை ஆச்சிரியபடுத்திய வாக்கியம், 'சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்'. அடப்பாவிங்களா, 61 வருடங்கள் ஆனாலும் நாமளும் நம்ம சினிமா மோகமும் மாறவே இல்லையா?

நான் ரசித்த ஹைக்கூ
ஜீவ காருண்யம்
மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக!
[அறிவுமதி]

அழையா விருந்தாளி
கையசைத்து
கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது
மழை!
[பழநி]


பூஞ்சை
சாய்ந்து கிடக்கும்
கட்டிலில் பூஞ்சை
வெளிநாட்டில் கணவன்

நாலணா
நானும் எடுக்கவில்லை
சாலையில் நாலணா
நாலணா என்பதால்



1 comment:

அருள் said...

அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

விரிவாக இங்கே:

http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html