ரசிக மகாக்குஞ்சுமணி

பசைக்கையை கழுவாம
பாயக்கூட விரிக்காம

வெறிந்தரையில கிடந்தான்
வெட்டிப்பய குஞ்சுமணி!

கண்கள்ரெண்டும் மூடுமுன்னே,
கனவுகளும் தொடங்குமுன்னே,

கோழிகூட விழிக்குமுன்னே,
கடகடன்னு எழுந்திருச்சான்!

பான்பராக்கு பாக்கெட்டொண்ண
பல்லாலே பிச்செடுத்து,

வாயெல்லாம் மென்னுதின்னு
வழியெல்லாம் துப்பிவைச்சான்!

துடைக்காத சாலையில
தெருநாயும் இவனும்மட்டும்!

பாதிவழி போகையில
பார்த்தானே சோதரன!

ரெண்டுபேரும் சேர்ந்துகிட்டு
ராசுத்தியேட்டரு போனாய்ங்க!

நாலுமணி ஆகும்முன்னே
நாப்பதுஅம்பது குஞ்சுமணிங்க

நடுராத்திரி நேரத்துல
நல்லாத்தான் சேர்ந்தாய்ங்க!

அண்ணாந்து பார்த்தாக்கா
அன்புத்தலைவன் கட்அவுட்டு

அறுபதடி உயரத்துல
அழகாத்தான் இருக்காரு

சுருட்டொண்ண கையில்வச்சு
சிரிச்சபடி நின்னாரு!

பயபுள்ள மனசெல்லாம்
பால்பாக்கெட்டு மேலமட்டும்!

தலைவர்பாட்ட ஆடிப்பாடி
தெருவெல்லாம் குப்பையாக்கி

பட்டாசா வெடிச்சாய்ங்க
பாவப்பட்ட குஞ்சுமணிங்க!

ஆறுமணி ஆகையிலே
ஆயிரம்பேரு ஆனாய்ங்க!

நம்மாள சுத்திமட்டும்
நாப்பதுபேர் நின்னாய்ங்க!

கூடிவந்த கூட்டம்பார்த்து
குஷியானான் நம்மபய!

சரசரன்னு ஏறிப்போனான்,
சரியாக்கட்டாத கட்டைங்கள்ள!

தலைவர்முகம் பக்கத்துல
தன்முகத்த சேர்த்துவைச்சான்!

பால்பாக்கெட் கையிலெடுத்து
பவுசாதான் காட்டிவைச்சான்!

அட்டையில்செஞ்ச தலைவனுக்கு
அபிஷேகம் செஞ்சுவைச்சான்!

ஆறுகோடி கேட்டுவாங்கி
அழிகியொண்ண கட்டிபிடிச்சு,

அலுங்காம குலுங்காம
ஆடிப்போன தலைவரு

இதெல்லாம் தெரியாம
இன்னும் தூங்கிகிட்டிருப்பாரு!

இவருகத நமக்கெதுக்கு
இங்ககதய பார்ப்போமே!

பாலெல்லாம் தீர்ந்தபிறகு
பாசமுத்தம் கொடுத்துவைச்சான்!

இந்தப்பய இறங்கும்முன்
இன்னொருபய ஏறிவந்தான்!

நான்தான்டா முதல்ல
நம்பபய பீத்திக்கிட்டான்!

மொதநாளு மொதஷோ
மொதபாலு ஹீரோவா,

மொதபெஞ்சில் உட்கார்ந்து
முழுபடமும் விசிலடிச்சான்!

வயிறுமுட்ட குடிச்சதில்ல
வாந்திகொஞ்சம் எடுத்துவைச்சான்!

நாளெல்லாம் சுத்திவிட்டு
நடுநிசியில் வீடுவந்தான்!

தெருநாயி வந்தாகூட
திரும்பிப்பார்க்கும் வீட்டுமக்க

இந்தப்பய வந்தத்தான்
இமைச்சுக்கூட பார்க்கலையே!

வெட்டிப்பய வந்ததுபோல
வீடுசின்னதாக்கூட அசையலையே!

பிறவியெடுத்த சாதனையா
பாலூத்திட்டு வந்திருக்கான்

இவனக்கூட பார்க்காம
இன்னும்தூங்கிகிட்டு இருக்காய்ங்க!

எழுப்பித்தான் கேட்டாக்க
என்னதெரியுமா சொல்லுவாய்ங்க?

கொஞ்சநஞ்சம் உறங்குனாதான்
காலையில வேளையில

கல்லுடைக்க முடியும்பாய்ங்க!
கால்கஞ்சி கிடைக்கும்பாய்ங்க!

விளங்காத பயலுங்க
வயித்ததான் பார்ப்பாய்ங்க!

பசியெல்லாம் பார்த்தாக்க
பாலூத்த முடியுமா?

ரசிகமகாக் குஞ்சுமணியா
ரவுசுபண்ண முடியுமா?

இந்தப்பய யாருன்னு
இன்னுமா தெரியல?

தலைவரோட அடுத்தபடம்
தீபாவளிக்கு வருதாமாம்,

பான்பராக்கு வாயோட
பால்பாக்கெட் எடுத்துகிட்டு

விடியாத நேரத்துல
வெறிநாயும் இவனும்மட்டும்

வீதிப்பக்கம் அலைவாய்ங்க,
வரும்போது பார்த்துக்கோங்க!


6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நாலுமணி ஆகும்முன்னே
நாப்பதுஅம்பது குஞ்சுமணிங்க//

ஹ ஹ ஹா தலைவா வரிக்கு வரி நகைச்சுவை அட்டகாசம்!

கதிர்கா said...

மிக்க நன்றி வசந்த்!

erodethangadurai said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

Anonymous said...

அருமை..அருமை நண்பா..

கதிர்கா said...

படைப்பாளி மற்றும் ஈரோடு தங்கதுரைக்கும் நன்றி!!

shortfilmindia.com said...

நல்லாருக்கு கதிர்கா.. கேபிள் சங்கர்