ரொம்ப அர்ஜென்டு - சிறுகதை

குறிப்பு - பெங்களூரு அரசியலுக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை!!!

'அண்ணே, கொஞ்சம் தள்ளி உட்காருங்கண்ணே, இந்த பக்கம் இடமே இல்ல?'  ஓரத்தில் அமர்ந்திருந்த ராஜன் சொன்னார்.

'நாங்க என்ன இடத்த வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறோம். இருந்தா தள்ளி உட்காருவோம்ல' என்ற ஹமீது கடிகாரத்தை பார்த்துக்கொண்டே பதில் சொன்னார்.


'எல்லாம் நேரம், எப்படி இருந்த நாம இப்படி ஆயிட்டோம்' என்று ராஜன், விவேக் பாணியில்  நினைத்துக்கொண்டார்.

'இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியுமாண்ணே', ராஜன் மறுபடியும் ஹமீதிடம் கேட்டார்.

'இன்னும் கால் மணிநேரத்துல வந்திரும்னு நினைக்கிறேன்.'

'ரெண்டு வண்டி ஏற்பாடு செஞ்சிருந்தா என்ன. ஒரே வண்டீல இவ்வளவு பேர போட்டு அடைச்சுக் கூட்டிட்டு போறாங்க?' ராஜன் விடாமல் கேட்டார்

'உங்களுக்கு இதுதான் முத தடவ, அதுதான் தெரியல. ரெண்டு மூணு வண்டியெல்லாம் ஏற்பாடு செஞ்சா வெளில சுலபமா தெரிஞ்சுடும்.'

'என்னமோ போங்க, இந்த லைனுக்கு வந்தப்ப இப்படியெல்லாம் இருக்குமுன்னு தெரியல'

'காசு கிடைக்குதுலப்பூ, அப்புறம் என்ன?'

'அதில்ல, எனக்கு ஒண்ணுக்கு போகணும். ரொம்ப நேரமா அடக்கிட்டு இருக்கேன். அதான்.'

'இங்க ரோட்டுல எல்லாம் நிறுத்தி, யாராவது பார்த்துட்டா பிரச்சனையாயிடும். மொத்த கவர்மெண்டே நம்மள வலைவீசி தேடிட்டு இருக்கு.'

ஒண்ணுக்கு போறதுக்கு இவ்வளவு பிரச்சனையான்னு நினைத்துக் கொண்டு, ராஜன் அதுக்கு மேல் எதுவும் பேசாமல் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நெளிந்து கொண்டிருந்தார்.

'அண்ணே வந்திருச்சானே?'

'இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.'

'இல்ல, எனக்கு ரொம்ப அர்ஜென்டா வந்திருச்சு!'

ஒருவழியாக வேன் அந்த கட்டிடத்தின் முன் நின்றது. அங்கே வாட்டசாட்டமாக சிலர் காத்திருந்தனர். வந்து இறங்கிய எல்லோரையும் உள்ளே அழைத்து சென்று கொண்டிருந்தனர். ராஜன் அவர்களை கண்டுகொள்ளாமல் வேனுக்கு பின்புறம் சென்று செடியோரத்தில் தன் முதல் கடமையை முடிக்க எத்தனித்தார்.

'ச்ச இப்படி ஊரு விட்டு ஊரு கூட்டிட்டு வந்து ஒண்ணுக்கு கூட போக விடாம பண்ணுறாய்ங்களே', மனதுக்குள் சலித்துக்கொண்டார்

நாளை மறுநாள் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்புக்காகத்தான்  இவர்கள் இந்த ஊருக்கு கூட்டி (கடத்தி?) வரப்பட்டிருக்கிறார்கள். தன்னை யாரும் தேடி வருவதற்குள் அவசரம் அவசரமாக கடமையை முடித்துக் கொண்டிருக்கிறார் பக்கத்து மாநில எம்.எல்.ஏ ராஜன்.

ஓட்டு போடுறத விட ஒண்ணுக்கு போறதுதாங்கதான முக்கியம். அவரை அவரு கடைமையை செய்ய விடுங்க, நீங்களும் டிஸ்டர்ப் செய்யாதீங்க!!


5 comments:

பழமைபேசி said...

ஆகா.... காலத்துக்கு ஏத்த கதையா இருக்கே?! பெங்களூருகாரர பார்த்து அனுப்பி வையுங்க அதுக்கும்....

Kuttymaanu said...

ஆத்திரத்தை அடக்குனாலும், மூத்தரத்த அடக்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க!!! சரியான "சின்னக்" கதை. வாழ்க!!!

கதிர்கா said...

கருத்துக்களை தெரிவித்த பழமைபேசிக்கும் Kuttymaanuக்கும் நன்றி!!

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்குங்க!

கதிர்கா said...

நன்றி எஸ்.கே