இலாபம்
யார் சொன்னது பங்குச்சந்தையே இலாபமானது என்று?
வாக்காளர் அட்டை அடக்க விலை நூறு ரூபாய்.
ஒவ்வொரு தேர்தலிலும் சந்தை விலை
ஐநூறு முதல் ஆயிரம் வரை.
இந்தியா வளர்கிறது!
லஞ்ச லைசன்ஸ்
எட்டு போட்டேன் கிடைக்கவில்லை,
பிச்சை போட்டேன் கிடைத்தது.
வரதட்சணை
கட்டிய சேலையுடன் வா!
பட்டு புடவைகளை பெட்டியில்
எடுத்துவா கசங்கிவிடும்!!
அருங்காட்சியகம்
அடர்ந்த மரங்கள்,
பச்சை புல்வெளி,
சில்லென்ற காற்று,
அழகிய சூழல்,
கூண்டுக்குள் கிளி.
2 comments:
கவிதைகள் அனைத்தும் அருமை
நன்றி யாதவன்
Post a Comment