இப்படிக்கு புரியாதசாமி [2]

உங்களுக்கு ஒரு பொது அறிவு கேள்வி
84 பேரு மேல கொலை கேஸ் இருக்கு
17 பேரு மேல திருட்டு கேஸ் இருக்கு

28 பேரு மேல சீட்டிங் கேஸ் இருக்கு
அதுலையும் ஒருத்தரு வேற யாருக்கும் கொடுக்காம தான் மட்டும் தன் மேல 17  கொலை கேஸ் வைச்சிருக்காரு.
இவங்க எல்லாரும் சேர்ந்து ஒரே இடத்துல கூடி இருக்காங்க. அந்த இடத்துக்கு பேர் என்ன?

ஜெயிலோ, நீதிமன்றமோன்னு நீங்க சொல்லியிருந்தீங்கன்னா, டிவியில மானாட மயிலாட தவிர வேற எதுவும் பார்க்குறதில்லைன்னு அர்த்தம். இப்படி சூதுவாது தெரியாம இருக்கிறீங்களேப்பூ!!

அந்த இடத்துக்கு பேரு நாடாளுமன்றமாம். கொஞ்சம பழைய செய்திதான், இருந்தாலும் இப்பவும் அதே நிலைமைதான் இருக்கும். அல்லது அதைவிட மோசமாக இருக்கும்.

எனக்கும் அந்த பெரிய கட்டிடத்துக்குள்ள போகணும்னு ரொம்ப நாள் ஆசை (அங்க உள்ள நடிகர் நடிகைங்க எல்லாம் இருக்குறாங்களாமே. காபி டிபன் எல்லாம் வேற ரொம்ப சீப்பா கீடைக்குமாமே!!).

எதுத்த வீட்டு ராமசாமியின் வேட்டிய திருடிட்டேன்னு இப்பத்தான் மொத கேஸ் பதிவாயிருக்கு. இன்னும் எத்தன கேஸ் என் மேல வந்தா என்னையும் அந்த கட்டிடத்துக்குள்ள  விடுவாங்கன்னு புரியல பாஸ்!!

எந்த கேஸ் பார்ட்டியையாவது பார்த்தீங்கன்னா கேட்டுச் சொல்லுங்களேன்!!!


No comments: