காளமேகப்புலவரின் காக்கா கவிதை - 2010ல் எழுதியது

வர வர சின்ன சின்ன ஆசைகள் நிறையா வருது. இந்த வாரம் மாட்டினவரு, நம்ம காளமேகப் புலவர் (அவர் ஆத்மா என்னை மன்னிக்க வேண்டும்).காளமேகப் புலவர் பற்றி கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். பல வித்யாசமான படைப்புகளைத் தந்தவர். அவரின் இந்த ஓரெழுத்துப் பாடல் மிகவும் பிரபலம்.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா


அர்த்தம் -

காக்கையானது பகலில் ஆந்தையை(கூகையை) வெல்லும்.  கூகையானது இரவில் காக்கையை வெல்லும். அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகிவிடக்கூடும்

ஒரே எழுத்தில் அற்புதமான படைப்பு. இதுல உனக்கு என்னடா விபரீதமான ஆசை அப்படின்னு கேக்குறீங்களா? அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க. இதே எழுத்த வைச்சு நம்மளும் ஏதாவது பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். வேணாம்டான்னு சொல்லுறீங்களா? நீங்க ரொம்ப லேட்டு. ஒரு முடிவு எடுத்துட்டேன்னா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்.

இதோ நம்மளது.


காக்கா காக்கை காக்கி காக்கா
கிக்கை கக்க கோக்கை கக்கி
கை கைக்காகா!!

2010 தமிழ்ல எழுதுனது. அதனால இதை செந்தமிழ்ப்பாட்டுன்னு நினைச்சுறாதீங்க. அட, அர்த்தம் என்னன்னு கேக்குறீங்களா? அதுக்குள்ள நான் வேற எதுவோ பேசிட்டு இருக்கேன். இது தாங்க அர்த்தம்.

கா கா என கரையும் காகம் போல் வேலை செய்யும்
காக்கிச்சட்டைக்காரர் (போலீஸ்) காவல் வேலையைச் செய்யாமல்,
கிக்கு (குடி) ஏற்றுவது எப்படி என்று கற்க (கக்க என மறுவியுள்ளது) முயற்சித்து,
அந்த முயற்சியில் கோக்கை (Coke-ஐ) வாந்தி எடுத்து (கக்கி),
அவர் கையாலேயே அவர் கையைத் தொட முடியாதபடி ஆனது (கை கைக்கு ஆகா).

மறுபடியும் கேட்டுக்கிறேன், காளமேகப் புலவரின் ஆத்மா என்னை மன்னிக்க வேண்டும்.


2 comments:

கமலேஷ் said...

காளமேகப் புலவர் உங்களை மன்னிட்சிருவாறு,
ஆனா காவல் துறையிலிருந்து உங்களை பொடோ ஆக்ட்ல கைது பண்ண ஆள் வந்துகிட்டு இருக்கும்ன்னு நினைக்கிறன்.

கதிர்கா said...

:-)