எந்திரன் பார்க்கலையோ - சிறுகதை

எந்திரன் வந்தாலும் வந்தது, என் உயிரே போகுது. எனக்கு ரஜினி மேலேயும் கோபமில்லை, சன் டிவி மேலேயும் கோபமில்லை. அவங்க கனவைக் காசாக்க, காசைக் கரியாக்கி எடுத்துருக்காங்க. படம் ஓடுனாலும் சரி, படம் பார்க்கிறவங்க ஓடுனாலும் சரி அவங்க பிரச்சனை. எனக்கு கோபம் அவங்க மேல இல்லை. யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி.

நான் அமெரிக்காவில் ஏதோ ஒரு நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண தகவல் தொழில்நுட்ப தொழிலாளி. இந்திய ராஜா அமெரிக்காவில் பிச்சையெடுத்தானாம் என்ற கதையாக 'விசா'வைத்தக்கவைக்க ஊரும் வேலையும் மாறி மாறி இந்த ஊரு வந்திருக்கிறேன். நான் இருக்கும் இந்த ஊரில் எல்லா அமெரிக்க பெருநகரைப் போலவும் இந்தியர்கள் அதிகம். என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கும் உண்டு. சராசரிக்கும் குறைவான வசதிகளே கொண்டதால் அந்த திரையரங்கிற்கு அமெரிக்க மக்கள் அவ்வளவாக வர மாட்டார்கள். அந்த காரணத்தினால், அங்கு இந்தியப்படங்களே வெளியிடப்படும். அதிலும் பெரும்பாலும் தெலுங்குப்படங்களே ஓடும். எப்பவாவதுதான் தான் தமிழ் படங்கள் வரும். அப்படித்தான் இப்போது எந்திரன் வந்துள்ளது.

இது சந்தோஷமான விஷயந்தானே என்கிறீரகளா? அப்படியென்றால் உங்களுக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் வித்யாசமில்லை. எனக்கு எந்திரன் பார்க்க விருப்பமில்லை. அதற்கு பெரிதான காரணமென்று எதுவுமில்லை. எனக்கு பாரக்க வேண்டாமென்று தோன்றியது, அவ்வளவுதான். அவ்வாறு தோன்றியது தப்பில்லை தானே. ஆனா எது தப்புன்னா அந்த திரையரங்கம் என் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இருந்ததுதான்.

போன வாரம் தான் அந்த படம் இங்கு வெளியிடப்பட்டது. இந்த ஊரில் எனக்கு தெரிந்த தெரியாத எல்லா தமிழர்களும் (சில தெலுங்கர்கள் உட்பட) பார்த்துவிட்டனர். பார்க்க வந்த சிலர் என் வீடு பக்கத்தில் இருப்பதால் என் வீட்டற்கும் வந்தனர். என் மனைவி வேறு இந்தியா சென்றிருப்பதால் போன் செய்யாமல் கூட வந்தனர். (மனைவி இருந்தால் முதல் நாளே போன் செய்து நாளை வரலாமா என்று கேட்டுத்தான் வருவர். இது என் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையா அல்லது எனக்கு கொடுக்கும் அவமரியாதையா என்று தெரியவில்லை)

வந்தவங்க எல்லோரும் சொல்லிவச்ச மாதிரி கேட்குற ஒரே கேள்வி, 'எந்திரன் பார்த்துட்டயா?' இல்லைன்னு சொன்னா, 'ஏன் பார்க்கல, ரஜினி பிடிக்காதா, கமல் ரசிகரா, ஷங்கர் பிடிக்காதா, சளி பிடிக்காதா'ன்னு அடுத்தடுத்து கேள்விக்கணைகள். பதில் சொல்லி மாளல. கடைசில அடுத்த வாரத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கேன்னு சொன்னாதான் விட்டனர். அதிலையும் ஒருத்தர் ஏன் இந்த வாரமே பார்க்கலைன்னு கேட்டாரு, என்ன சொல்லுறதுன்னு தெரியல அப்ப, சும்மா வழிஞ்சு வைச்சேன்.

சரி வீட்டுக்கு வர்றவங்க தான் இப்படின்னா, நேத்து வால்மார்ட் கடைக்குப் போனேன். (வால்மார்ட் இந்தியாக்கு வருதாமே, அண்ணாச்சி கடைகள் எல்லாம் பாவந்தான்). கடைல, ரெண்டு பேர் இதே கேள்விகளைக் கேட்டனர். அடுத்த வாரம்னு இன்ஸ்டென்ட் பதில் சொன்னேன்.

இன்னைக்கு திங்கட்கழமை ஆபிஸ் போனேன். ஆபிஸ்ல ஒரு மெக்சிகன் கேட்டான், 'உன் வீட்டுக்குப்பக்கத்துல உள்ள திரையரங்குள்ள ரோடு வரைக்கும் க்யூல நின்னாங்களே என்ன விஷயம்'. நான் எந்திரன், ரஜினி பற்றியெல்லாம் எடுத்து சொன்னேன். அவனும் கேட்டான் நான் பார்த்து விட்டேனா என்று. இல்லையென்று சொன்னேன், மற்றவர்களைப்போலவே ஏன், எதற்கு என ஆரம்பித்துவிட்டான். அவனிடமும் அடுத்த வாரம்னு பதில் சொல்லிவிட்டேன்.

மெக்டொனால்டில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பக்கத்து வீட்டுக்காரரும் அதையே கேட்டார். அதையே சொன்னேன்.

வீட்டுக்குள் டிவியை ஆன் செய்துவிட்டு ஷோபாவில் உட்கார்ந்தேன். விஜய் டிவியில் போட்ட நிகழ்ச்சியையே மறு ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தனர். (விஜய் டிவி அமெரிக்காவில் மட்டுந்தான் அப்படிப் பண்ணுறாங்களான்னு தெரியல). பக்கத்து வீட்டு நண்பர் போன் செய்தார். இந்த வாரத்தோட தமிழ் எந்திரன தூக்கிட்டு தெலுங்க Robo-வ (எந்திருடுன்னு ஏன் பேர் வைக்கல?) போடுறாங்களாம். அதனால இந்த வாரமே பார்க்கச் சொன்னார். நன்றி சொல்லி போனை வைத்தேன்.

அடப் போங்கய்யா. நானும் நாளைக்கு க்யூல நின்னு எந்திர ஜோதில ஐக்கியமாயிட வேண்டியதுதான். அந்த படத்த பார்க்காம கோட்டை விட்டா, ஏன் பார்க்காம விட்டுட்டங்குற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது.

[பின் குறிப்பு: இந்த பின் குறிப்பை எழுதுவது மேலே சொன்ன நிகழ்ச்சியிலிருந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு. எந்திரன நேத்து பார்த்துட்டேன். படம் எப்படின்னு கேட்கிறீங்களா? அட, நீங்க இன்னுமா திருந்தல. என்னால முடியல. இப்பவும் சொல்லுறேன், எனக்கு யார் மேல கோப்படுறதுன்னே தெரியல. என் கோபம் அப்படி]


13 comments:

Raju said...

:-)

Umapathy said...

ஏன் எந்திரன் இன்னும் பாக்கல?
நானும் கேட்டுட்டனே

Sheikmohamed said...

பொய் சொல்லாதீர்கள் உங்கள் கதைப்படி ரோபோ தெலுங்கு படம்தான் கண்டுள்ளீர்கள்

அன்புடன் பிரசன்னா said...

கதிர் நீங்க என்னும் ரோபோ பார்க்கலையா? வந்து ஒரு வரமாய்ச்சு.....

PB Raj said...

என்னத்த புதுசா காட்ட போறாங்க?

படம் தான் தமிழ் படம் BUT TECHNICAL TEAM நாம அல்ல..

கதிர்கா said...

இங்கே பின்னூட்டமிட்டு தங்கள் கருத்துக்களை சொன்ன ♠ ராஜு ♠ , உமாபதி, Nickyjohn, பிரசன்னா மற்றும் ராயல் ராஜ் அவர்களுக்கு நன்றிகள்.

hameed said...

good keep posting

Dhaya... said...

enthiran film pidikalaina pothikitu iru ilana un vaayila "vaazhpalam" vechu un vaaya moodiduven, purithaaa(vaazhpalam).

Dhaya... said...

//ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

என்னத்த புதுசா காட்ட போறாங்க?

படம் தான் தமிழ் படம் BUT TECHNICAL TEAM நாம அல்ல..///

Unnaya vachu CG pannuna Ramanarayanan padam than Panna Mudium...

கதிர்கா said...

Dhaya அவர்களுக்கு, எனக்கு எந்திரன் பிடிக்கவில்லையென்று யார் சொன்னார்கள்?

கதையில் உள்ள வரிகள் இவை, 'எனக்கு எந்திரன் பார்க்க விருப்பமில்லை. அதற்கு பெரிதான காரணமென்று எதுவுமில்லை. எனக்கு பாரக்க வேண்டாமென்று தோன்றியது, அவ்வளவுதான். அவ்வாறு தோன்றியது தப்பில்லை தானே'

ரமேஷ் வைத்யா said...

கதிர்கா,
அபாரமான எழுத்து. முடியுமானால் பேசுங்கள். 7708548116

கதிர்கா said...

மிக்க நன்றி ரமேஷ் வைத்யா. கண்டிப்பாக உங்கள் எண்ணை அழைக்கிறேன்.

சிவபார்கவி said...

அண்ணே எந்திரனை பாக்கவே இந்தக் கதைண்ணா ஆபிஸ்லே என்ன வேலை பார்த்து என்னத்தை செய்வீங்களோ.. என்ன மாசம் 5000 டாலர் தருவாங்களோ...