ஒற்றை எழுத்தில் ஐந்து வரிகளில் ஒரு ராமாயணக் கவிதை

த என்ற எழுத்துவரிசையை மட்டும் வைத்து கைகேயி வரத்தை பற்றிய ஒரு பாடலை சமீபத்தில் ரசித்தேன்.


தாதை துதைத்த தோதுத் தேதி!
தத்தைத் தொத்தா துதித்த
தாதித்தூது தீதுதித்தே!
தாதொத்த தெத்தா
தாதே தோத்துத் திதித்ததே!!!

அதாவது, தசரதன் நெருக்கமாக இருந்த நேரத்தில், கிளி போல் அழகுற பேசும் கைகேயி கேட்ட கூனியின் வரத்தால் தீயது நடந்தது. உலோகம் போன்ற வலிமைமிக்க இயற்கையே தன் வலிமையை இழந்து குழப்பத்தில் தோற்றது.

தாதை - தந்தை
துதை - நெருக்கமான
தோதுத்தேதி - தோதான நாள்
தத்தை - கிளி
தொத்தா - சித்தி
துதித்த - கேட்ட
தாதித் தூது - வேலைக்காரியின் கேள்வி (கூனியின் வரம்)
தீதுதித்து - தீயதை உதிர்த்து
தாதொத்த - தாது ஒத்த (உலோகம் போன்ற)
தெத்தா - குழப்பமில்லா (வலுவான)
தாது - பஞ்ச பூதங்கள் (இயற்கை)
தோத்து - தோற்று
திதித்ததே - குழப்பமடைந்ததே



பின் குறிப்பு: இதை எழுதியது அடியேன்தான். பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.





1 comment:

Siva said...

வித்தியாசமான முயற்சி!!